அடிப்படையில நான் ஆசிரிய குடும்பத்து பொண்ணு. (அதென்ன ஆசிரிய குடும்பம்னு கேட்குறவங்களுக்கு) அம்மா வழி தாத்தா, பாட்டி, அப்பா வழி பாட்டி, பெரியம்மாக்கள், அக்கா, மாமா னு எல்லாரும் Teachers தான். அப்பா கூட பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி டீச்சர் ஆ தான் இருந்தார். எனக்கும் சின்ன வயசில இருந்த ஏகப்பட்ட ambitions ல டீச்சர் ஆகணும்றதும் ஒண்னு. அப்போ கூட விவசாயத்த பத்தி யோசிச்சதில்ல. அதுனால விவசாயத்துல என் ஞானம் பூஜ்யம் தான்.
ஆனா நான் வாக்கப்பட்டு வந்திருக்கிற வீடு விவசாய குடும்பம். என் மாமனார் அ தவிர மத்த சொந்தகாரங்க எல்லாரும் விவசாயிங்க தான். அதுனால தானோ என்னவோ எனக்கு திடீர்னு, ஊரு ஒலகமே விவசாயம் பண்ணும்போது நம்மளும் ஒரு தோட்டத வாங்கி முயற்சி பண்ணா என்னனு தோணுச்சு. Budget அனலிசிஸ் ஆரம்பிச்சேன். காஸ்ட் ஓகே தான். ஆன நேரமும் உழைப்பும் நமக்கு போட முடியுமா னு ஒரே தயக்கம். மெதுவா அம்மா கிட்ட சொன்னேன். அவங்க ஒடனே நான் ஹெல்ப் பண்றேன் ஆனா எனக்கு கம்ப்யூட்டர் ஆ கூட எப்டி operate பண்றதுன்னு தெரியாதே னு சொன்னங்க. ஒடனே அம்மா க்கு ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ணிட்டேன். எப்படி விதைக்கணும், எப்போ அறுவடை, எப்படி உரம் போடுறது, எப்படி பக்கத்துக்கு தோட்டகாரங்ககூட சுமுகமா உறவு வச்சிக்கிறது னு எல்லாம் சொல்லி குடுத்தேன்.
ஆரம்பத்துல நான் உழுது, விதைச்சிட்டு ஆபீஸ் கிளம்பிடுவேன். அறுவடை டைம் ல அம்மா அறுவடை பண்ணி வச்சிர்பாங்க. கடைசில அம்மா ரொம்ப expert ஆகி தனியா தோட்டம் வாங்கிட்டாங்க. Of Course என் தோட்டத்தையும் நல்லா தான் பாத்துகிட்டாங்க.
ஆனா என் வீட்டுக்காரர் இத எல்லாம் ரொம்ப எதிர்த்தார். அவருக்கு ஏனோ நாங்க எப்போ பாரு தோட்டம் தோட்டம் னு இருக்கிறது பிடிக்கலை. சரி அவருக்கு பிடிக்கலேன்னா எனக்கும் வேண்டாம்னு என் தோட்டத்து பக்கமே நான் கொஞ்சநாள் போகாம இருந்தேன். அம்மாவும் என் பொண்ணுக்கு இல்லாத தோட்டம் எனக்கு எதுக்கு னு அவங்களும் தோட்டத்து பக்கமே போகல. இப்டியே ஒரு மூணு மாசம் போச்சு. எப்போவாவது ஆபீஸ் ல ரொம்ப போர் அடிக்கும் போது தோட்டத ஒரு எட்டு பாத்துட்டு வருவேன். மனசு கஷ்டமா இருக்கும்... எல்லார் தோட்டமும் எதாவது விளைச்சல் இருக்கும். என் தோட்டம் மட்டும் உழுது போட்டதோட நிக்கும்.
இந்த நேரத்துல தான் என் வீட்டுக்காரர் iPhone வாங்கினார். நான் ஒடனே அதுல போய் FarmVille application டவுன்லோட் பண்ணி வச்சேன். பாத்தா இப்போ அவர் Farmville விளையாட ஆரம்பிச்சுட்டார். எனக்கும் பிக்பென் கட்டுறதுக்கெல்லாம் ஆணி, மரபலகை எல்லாம் அனுப்புறார். So நான் இப்போ மறுபடியும் என் தோட்டத்துல விவசாயத்த ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப சந்தோசமா இருக்கு.
எங்கள் குடும்பம் விவசாய குடும்பம்...டிங் டிங்ட டிங்.....
No comments:
Post a Comment