Friday, September 3, 2010

இதன் பேர் தான் மொக்கையோ ?

Blog ஆரம்பிச்சு  கிட்ட  தட்ட  ஒரு  மாசம்  ஆன   பிறகும், என்ன  எழுதுறதுன்னு  புரியல .... நல்ல வேலையா Friends  Day வந்துச்சு. ஓகே அத பத்தி எழுதலாம்னு பிளான் பண்ணேன். என்ன எழுதனும்னு எதோ எக்ஸாம் க்கு prepare பண்ற மாதிரி ஆபீஸ் போகும் போதும் வரும் போதும் தீவிர சிந்தனை. ஆனா பாருங்க, என் ராசி எதாவது ரொம்ப பிளான் பண்ணா புட்டுக்கும்... so as usual புட்டுனுடுத்து.

சரி வேற எதாவது விஷயம் மாட்டாமலா போகும்னு மனசை தேத்திகிட்டேன். சமூகத்துல நடக்கிற விஷயங்கள உன்னிப்பா கவனிட்சா எதாவது மாட்டும்னு என் பார்வை ய விசாலமா வச்சுக்கனும்ற முடிவுக்கு வந்தேன்.. அதுல ஒரு சின்ன சிக்கலாகி போச்சு.. பார்வை ரொம்ப விசாலமா போனதால, பக்கதுல இருக்குற படி சரியாய் தெரியாம ஒரு சின்ன விபத்தாகி போச்சு..

அப்போ முடிவு பண்ணேன்.. மொக்கை யோ சொதப்பலோ, எதுனாலும் என் சோத கதைய மட்டும் எழுதுறதுன்னு... இன்னிக்கி அப்டி ஒரு என் வாழ்நாளிலே கோல்டன் வோர்ட்ஸ் ல பொரிக்க படவேண்டிய நாள்.  வேற ஒன்னும் இல்லைங்க என் கல்யாண நாள். 2 வருஷம் முடிஞ்சு 3 வருசத்தில நானும் அவரும் கால் வைக்கிறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனந்த கண்ணீர் கூட வருது... நம்ம கூடயும் ஒரு மனுஷன் 2 வருஷம் குப்ப கொட்டிர்காரேனு தான். அதுனால அவருக்கு ஒரு வார்த்தை : Thank  You Dear . Love you a loads....

பின் குறிப்பு: ஹப்பா டா. விட்டுது டா சாமி னு யாரும் சந்தோசப்பட வேண்டாம்.. Friends Day பத்தின பதிவு கூடிய விரைவில்...

No comments:

Post a Comment