ஆயிரம் முறை சொல்லிகொள்கிறேன்
உன்னை பிடிக்காது எனக்கு...
எதிர்பார்புகளும் அதன் ஏமாற்றங்களும்
போதும் இனி மேலாவது.....
கேசம் ஒதுக்கி முத்தமிடும்
ஒரு கணத்துக்காக ஏங்கி
அந்த ஏக்கமே வாழ்க்கையாய்....
கண்ணீர் துடைக்க கைகள்
தலை சாய்க்க தோள்கள்
இளைபாற ஒரு மடி
காயபடுத்த உன் வார்த்தைகள்
வேண்டாம் எதுவும் வேண்டாம்
ஆயிரம் முறை சொல்லிகொள்கிறேன்
உன்னை பிடிக்காது எனக்கு...
இருந்தும்....
நீ என்னை கடக்கும் போது
வழியும் ஒரு துளி கண்ணீர் சொல்லிவிடுகிறது
உனக்கான எனது காதலை.......
Saturday, November 20, 2010
எங்கேயோ எப்பொழுதோ படித்தது...
என் உறக்கம் மட்டுமே அறிந்த கனவுகள்
என் உள்ளம் மட்டுமே அறிந்த ரணங்கள்
என் தலையணை மட்டுமே அறிந்த கண்ணீர்
வெளியே சிரிப்பும் உள்ளே அழுகையுமாய் நான்
வழக்கம்போல் எதைபற்றியும் என்னைப்பற்றியும்
கவலைபடாமல் நீ......
- யாரோ...
என் உள்ளம் மட்டுமே அறிந்த ரணங்கள்
என் தலையணை மட்டுமே அறிந்த கண்ணீர்
வெளியே சிரிப்பும் உள்ளே அழுகையுமாய் நான்
வழக்கம்போல் எதைபற்றியும் என்னைப்பற்றியும்
கவலைபடாமல் நீ......
- யாரோ...
Subscribe to:
Posts (Atom)