"அம்மா இந்தியா போனா திரும்பி வரப்போ பாப்பாக்கு நட்ராஜ் HB பென்சிலும் ரப்பரும் வாங்கிட்டு வரசொல்லுங்க" - என்றார் ஒரு தோழி.
அவர் சொன்ன பாப்பா இப்பொழுதான் ஒரு இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலில் K1 (கிண்டேர்கர்டேன்) படிக்கபோகிறது. நானெல்லாம் HB பென்சிலை +1 லில் தான்
உபயோகித திருககிறேன். அதுவும் ரெகார்ட் நோட்டிற்கு மட்டும் தான் .ஒண்ணாப்பில் எல்லாம் ஸ்லேட்...குச்சி... தான். கிளாஸ் வொர்க், ஹோம் வொர்க் எல்லாமே ஸ்லேட்டில் தான். வெள்ளிகிழமை கொடுத்த வீடு பாடத்தை செய்ய மறந்து போய், திங்கட்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் போதே ஸ்லேட்டில் வீடு பாடம் எழுதி கொண்டே போவேன். சில சமயம் ஸ்லேட்டில் கண்டதையும் கிறுக்கி விட்டு, பின் லேசாக அழித்துவிட்டு, டீச்சர்ரிடம் பை குள்ள வச்சு எடுக்கும் பொது அழிஞ்சு போச்சு டீச்சர் என கதை விடுவோம். மூன்றாம் வகுப்பு படிக்கும் வரை அப்படி தான்.
நான்காம் வகுப்பு படிக்கும் பொது தான் பென்சில் அறிமுகம். கணக்கும் நோட்டில் பென்சிலில் எழுதுவது எனக்கு விருப்பமான ஒன்று. இருந்தாலும் பென்சிலில் எழுதுவதற்கு ஆர்வமில்லாமல் போனது பேனாக்களின் மேலிருந்த ஆசையினால் தான். இருந்தும் ருக்கு அத்தை டியூஷன்லில் டியூஷன் டெஸ்ட் நடத்தி நிறைய மதிப்பெண் எடுப்பவருக்கு கிரிக்கெட் பென்சில் தருவார். அதை வாங்குவதர்க்காகவே விழுந்து விழுந்து படிப்போம்.
பிறகு வந்தது பேனா, ஒரு வழியாக ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது. அதிலும் ஏமாற்றம். பால்பாயிண்ட் பேனா
உபயோகிக்க கூடாது. மை பேனா மட்டுமே உபயோகிக்க வேண்டும். மர மை பேனா , பிளாஸ்டிக் மை பேனா, ஹீரோ பேனா என அதிலும் ஏகப்பட்ட வகைகள். பேனா எழுதவில்லையானால் இங்க்கை ஒரு தெளி தெளித்து எழுதி பார்ப்போம். இந்த முறை 90% பலன் தரும். அப்படியும் எழுதவில்லையா, பேனாவின் திருகை சிறிது திறந்து, தலைகீழாக கவிழ்த்து, நிப்பின் வழி ஒரு சொட்டு மை வரும்படியாக திருகி பார்ப்போம். நிப்பை blade ஆல் கீறி எழுத வைப்போம்... கை விரல் எல்லாம் மை இருந்தால்தான் படிக்கும் பிள்ளைக்கு அழகு என பீற்றிக்கொள்வோம் .
ஒரு வழியாக கல்லூரியில் அடியெடுத்து வைத்ததும் ஒரேடியாக மாறினோம் பால்பாயிண்ட்ற்கு....அதிலும் slim n sleek ற்கு தான் ஒட்டுமொத்த பாவையர் வோட்டும். அப்பொழுதான் வந்தது "Micro tip pen"... ஒரே இரவில் ஒட்டு மொத்த பால்பாயிண்ட்யும் தூக்கி தூர போடா வைத்து விட்டது...
இப்போ, வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு sign போட மட்டும் தான் பேனா என்றாகி போய்விட்டது .
என் மகனுக்கு ஒரு magic slate உடன் ஒரு சாதா slate யும் வாங்கி தர வேண்டும்... என் பால்யத்தை நினைவுகொள்ளவேனும்..