Monday, March 19, 2012

செண்பகபூ - சிறு குறிப்பு

ஏன் இந்த blog க்கு செண்பகபூ ன்னு பேர் வைத்தேன் - ன்னு யோசிச்சு பாக்குறேன். (நாங்க கேட்டோமா -ன்லாம் கேக்கபடாது. ஆபீஸ் ல எவ்ளோ நேரம் வெட்டி ஆ உட்காந்திருக்க முடியும்?)

என்னமோ blog  அரம்பிக்கலாம்னவோடானே எனக்கு தோணின பேர் அதுதான். "கரையெல்லாம் செண்பக பூ" வோட inspiration லாம் இல்ல. என் வீட்டுக்காரரோட inspiration தான்.

எனக்கும் வாசத்துக்கும் ரொம்ப தூரம். இந்த லைன் ஆ நீங்க கரெக்ட் ஆ புரிஞ்சுகலேன்னா தப்பர்த்தம் வரதுக்கு நெறைய சான்ஸ் இருக்கு... I mean , வாசமான பொருட்கள் லாம் எனக்கு ஆகாது. முக்கியமா மல்லிகை பூ வாசம், கனகாம்பர வாசம், perfume வாசம் இதெல்லாம். தலைவலி வந்திரும். மைசூர் சாண்டல் சோப்பு வாசமும், பன்னிர் வாசமும் தான் என் எல்லையில் அனுமதி. மத்ததெல்லாம் தடா தான்.

ஆனா, vk (வீட்டுக்காரரோட சுருக்கம், type  பண்ண கஷ்டமா இருக்குல்ல!! அதான்) நேர் எதிர். எப்போவுமே அவரும் வாசமா இருக்கனும் ன்னு நினைப்பார். நெறைய வீடுகள்ல இப்படிதான்னு நினைக்கிறேன். (யாரவது என் Blog  ஆ படிச்சா, சொல்லுங்களேன்..இது கரெக்ட் ஆ இல்லையானு!!!)

என் கல்யாணம் ஆன புதுசுல, யார் கடைக்கு போனாலும் "Sunday Monday " வாங்கிட்டு வா ன்னு சொல்லிடே  இருப்பார். எனக்கு தான் ஒரே டவுட், "Tooty Fruity" தெரியும், ஆன அதென்ன  "Sunday Monday " . அப்புறம் தான் தெரிஞ்சுச்சு  "Sunday Monday "-ன்னா ஊதுபத்தி ல ஒரு brand ன்னு. அதுல ஒரு ஊதுபத்தி கொளுதினலே போதும் எனக்கு... மயக்கம் வந்து முன்ஜென்ம நியாபகம் லாம் எனக்கு வந்திரும்.

அவருக்கு ரொம்ப பிடிச்ச பூ தான் செண்பக பூ. ஏன் இந்த பூவ லேடீஸ் யாரும் அவ்ளோவா தலைல வக்கிறதிலகறதுதான் அவரோட வருத்தம். இது கல்யாணத்துக்கு முந்தி...ஏன் நீ(நான்) ஒரு பூவும் தலைல வக்கிறதிலகறதுதான் அவரோட லேட்டஸ்ட் வருத்தம் .

எங்க ஊரு பக்கம்லாம் நான் செண்பக பூ மரத்த பாத்ததே இல்ல. ஆனா சிங்கப்பூர்ல இந்த மரம் ரொம்ப ஜாஸ்தி... இந்த மரத்துல எறும்பு வேற ஜாஸ்தி இருக்கும். ஆனாலும் பூவ பறிக்காம விடமாட்டார். பூ பறிக்கிறது ரொம்ப பாவம், மரத்துக்கு வலிக்கும், Town Council ல பாத்தா fine போடுவாங்க, அது இது ன்னு நான் என்னலாமா சொல்லியும் கேட்டபாடில்ல.

இப்போ புது வீடு மாரிவிட்டபிறகு MRTstation போகும் வழியிலேயே செண்பக மரம். இப்போலாம் அவர் கூட வராம நான் தனிய அந்த வழியே போனாலும் பூ பறிக்கிறேன்(எறும்பு கடியோட தான்...) செண்பக பூ வாசம் ரொம்ப பிடிக்கிறது இப்போதெல்லாம்.