Saturday, January 7, 2012

What is a day?

ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து. இனிமேல் அடிக்கடி எதாவது எழுதலாம்னு எண்ணம். பார்க்கலாம்.


ஒரு நாள் ரொம்ப வெட்டியா போச்சுன்னு எதவச்சு சொல்வோம்? ஆபீஸ்லையோ வீட்லயோ  வேலையே பாக்காம இருந்தாவா? சும்மா உட்காந்து டிவி எ பார்த்திக்கிட்டு இருந்தாவா? நாள் முழுக்க தூங்கினாவா? வெட்டி - இந்த வார்த்தைக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கலாம். ஆனா என்னை பொருத்தவரைக்கும் சந்தோசமா சுத்தி இருக்கவங்க கிட்ட நாலு வார்த்தை பேசாம, முகத்த இருக்கமா வைத்திருபவர்கள் ஓட நாள் தான் உண்மையிலேயே வெட்டி யா போன நாள்.
Foreign வேலைக்காக வெளிநாட்டிலிருக்கும் நண்பனிடம் chatting ல நேரம் செலவழிக்கும் ஒருத்தருக்கு மனைவியுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை. உயரதிகாரி போடுற மொக்கை எல்லாம் தாங்கும் ஒருவருக்கு வயதான அப்பா/அம்மா/மாமியார்/மாமனாரிடம் பேச முடிவதில்லை.


காலம் முழுவதும் நம்முடன் வரபோகும் உறவுகளை எப்படி நம்மால் எளிதாக ignore செய்துவிட முடிகிறது? இது உரிமை என்கிற பேரில் நடக்கும் காட்டுமிராண்டிதனமல்லவா?